உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கடந்த 20 வருடங்களாக பிஸியான நடிகையாக இருப்பவர் த்ரிஷா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ் என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
த்ரிஷாவைப் போலவே கடந்த 20 வருடங்களாக முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. அவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கடந்த வாரம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. நயன்தாரா திருமணம் முடிந்த பிறகு த்ரிஷாவுக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது 40 வயதைத் தொட்டிருக்கும் த்ரிஷா, நடிகை நயன்தாராவை விட ஒன்றரை வயது மூத்தவர். கடந்த 2015ம் ஆண்டு தொழிலதிபரான வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், சில மாதங்களிலேயே நிச்சயத்துடன் தங்களது உறவை இருவரும் முறியத்துக் கொண்டார்கள். அதன் பிறகு த்ரிஷாவின் திருமணம் பற்றிய தகவல் எதுவும் வந்ததேயில்லை. தற்போது அவரது சம காலத்து நாயகியான நயன்தாராவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளதால் த்ரிஷாவின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.