'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் பவன் கல்யாண். கடந்த சில வருடங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் அடுத்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அக்டோபர் 5ம் தேதி முதல் பேருந்து பிரச்சாரப் பயணம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார் பவன் கல்யாண். அதற்காக அவருடைய பாதுகாப்புக்கென 8 கருப்பு நிற ஸ்கார்ப்பியோ வண்டிகளை வாங்கியுள்ளார். அந்த வண்டிகள் நேற்று பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த 8 வண்டிகளும் பவன் கல்யாண் மேற்கொள்ள உள்ள பேருந்து பிரச்சாரப் பயணத்தின் அவருடைய 'கான்வாய்' ஆக செல்ல உள்ளதாம். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் இந்த வண்டிகளை பவன் கல்யாண் அவரது சொந்தப் பணத்தைக் கொடுத்து வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்த செய்திகள் வர ஆரம்பித்ததில் இருந்து சமூக வலைத்தளங்களில் பவன் கல்யாணைக் கிண்டலடித்தும் வருகிறார்கள்.