'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றவர். 6 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். ஜூராசிக் பார்க், ஜாஸ், இண்டியானா ஜோன்ஸ். ரெய்டர்ஸ் ஆப்தி லாஸ்ட் ஆர்க், ஷிண்டர்ஸ் லிஸ்ட் உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். 20க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.
ஸ்பீல்பெர்க் இயக்கிய 'ரெடி ஒன் ப்ளேயர்' சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 1961ஆம் ஆண்டு வெளியான 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' என்ற படத்தை ஸ்பீல்பெர்க் ரீமேக் செய்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தலால் பணிகள் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் ஸ்பீல்பெர்க். இந்த படம் ஸ்பீல்பெர்க்கின் குழந்தைப் பருவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. ஸ்பீல்பெர்க் தனது சிறுவயதில் அரிஸோனா மாகாணத்தில் வாழ்ந்தபோது நடந்த நிகழ்வுகளை கொண்டு இந்த படத்தினை இயக்க உள்ளார். 1950 மற்றும் 60 காலகட்டங்களில் நடப்பது போல உருவாகிறது.
ஸ்பீல்பெர்க் 1946ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார். அப்பா இன்ஜினீயர் ,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர். அப்பா கொடுத்த ஒரு உடைந்த ஸ்டில் கேமராதான் அவரை ஆஸ்கர் வரையில் கொண்டு வந்து நிறுத்தியது. அந்த கேமராவை வைத்துக் கொண்டு அவர் செய்த குறும்புகளே இப்போது சினிமா ஆகிறது.