காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தமிழகத்தில் பாஜகவில் நடிகைகள் கவுதமி, குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கலா மாஸ்டர், சிவாஜியின் மகன் ராம்குமார் என பலரும் இணைந்துள்ள நிலையில் மேலும் பலர் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் நடிகர் விஷால் பாஜகவில் இணையப்போவதாக செய்தி வெளியானபோது அதை அவர் மறுத்தார். தற்போது நடிகர் அர்ஜூனும் விரைவில் பாஜகவில் இணையப்போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் மிகப்பெரிய ஆஞ்சனேயர் கோயில் கட்டி வருகிறார் அர்ஜூன். அதை சில மாதங்களுக்கு முன்பு பார்வையிட்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அர்ஜூனை பாஜகவில் சேருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் எல்.முருகன் ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார் அர்ஜூன். இதனால் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அர்ஜூனும் பாஜகவில் இணைவார் என கூறப்படுகிறது.
அர்ஜூனை போன்று தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் ராஜேஷும், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் எல்.முருகனை சந்தித்துள்ளார்.