'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டாக்டர். மார்ச் 26ல் படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். தேர்தல் காரணமாக பட ரிலீஸ் தேதி மாறலாம் என காலையிலேயே நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இப்போது அது உண்மையாகி உள்ளது. டாக்டர் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், டாக்டர் படத்திற்கு ஆரம்பம் முதல் நீங்கள் அளித்த வரும் ஆதரவு அளப்பரியது. மார்ச் 26ல் படத்தை வெளியிடலாம் என அறிவித்து இருந்தோம். தேர்தல் காரணமாக இப்போது ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளோம். புதிய ரிலீஸ் குறித்து பேசி வருகிறோம். ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும். தொடர்ந்து உங்களின் ஆதரவை எப்போதும் எங்களுக்கு தர வேண்டுகிறோம். உங்களின் காத்திருப்புக்கு எங்களின் டாக்டர் நிச்சயம் மதிப்பாக இருக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.