'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்து தற்போது வெளியாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் ராமசாமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படம் வெளியான பிறகு செல்வராகவன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், ராமசாமி என்று ஒரு தனி நபரை குறிப்பிட்டு தானே அந்த கேரக்டருக்கு பெயர் வைத்தீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆமாம் என்று பதில் கொடுத்திருந்தார் செல்வராகவன்.
அதையடுத்து ஈ.வே.ராமசாமி பெயரைத்தான் செல்வராகவன் வைத்திருக்கிறார் என்று சொல்லி அவருக்கு எதிராக கருத்து வெளியிட்டு வந்தனர். இதையடுத்து தனது டுவிட்டரில், நண்பர்களே, அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. அதை நீங்கள் சுட்டிக்காட்டிய பின்பு தான் புரிகிறது. கவனமாக இருந்திருக்க வேண்டும் . மன்னிக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.