அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி |

'முதன்முதலாக' என்று சொல்லக்கூடிய பட்டியலில் தற்போது லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளவர் நடிகை பார்வதி.. ஆம்.. மலையாளத்தில் மம்முட்டியுடன் முதன்முறையாக 'புழு' என்கிற படத்தில் இணைந்து நடிக்கிறார் பார்வதி. அறிமுக பெண் இயக்குனர் ரதீனா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை துல்கர் சல்மான் ரிலீஸ் செய்கிறார். இது மலையாள திரையுலகை பொறுத்தவரை உண்மையிலேயே ஆச்சர்யமான செய்தி தான்.
காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான 'கசபா' என்கிற படத்தில், பெண்களை மம்முட்டி இழிவுபடுத்தியுள்ளதாக பார்வதி கூறினார். அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியதுடன் அப்படியே பார்வதிக்கு எதிராக திரும்பி, அதனால் கொஞ்ச காலம் படவாய்ப்புகளே கிடைக்காமல் சிரமப்பட்டார் பார்வதி.
அதன்பிறகு ஒரு பேட்டியில், “மம்முட்டியை பற்றியும் அவருடைய படத்தை பற்றியும் விமர்சிக்கவில்லை. நான் பொதுவாக பேசியதை, சிலர் மம்முட்டிக்கு எதிராக பேசியதாக கூறி திரித்து விட்டார்கள்” என விளக்கமும் அளித்தார் பார்வதி. அதன்பின் நிலைமை ஒரளவு சீராகி, பட வாய்ப்புகள் மீண்டும் பார்வதியை தேடி வரத்தொடங்கின. இதோ இப்போது மம்முட்டியுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நீண்டநாள் சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.




