நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வளர்ந்து வரும் மலையாள நடிகை பார்வதி நாயர். தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ளராஜா, சீதக்காதி உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபீர் லால் இயக்கத்தில் உருவாகும் உன் பார்வையில் படத்தில் நடித்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: இப்படத்தில் தன் சகோதரியின் கொலையாளியை தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறேன். பழிவாங்கும் திரில்லர் திரைப்படமாக உருவாகிறது. மிக அழுத்தமானதொரு கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது உற்சாகமாக இருக்கிறது.
தென்னிந்திய சினிமாவில் பெண் கதாப்பாத்திரத்தை மையப்படுத்திய படம், நல்ல தயாரிப்பு நிறுவனத்தில் நல்ல இயக்குநரின் இயக்கத்தில் உருவாவது மிகவும் அரிது. இரட்டை வேடம் இது வரை நான் செய்திராத ஒன்று, எனக்கு மிகவும் புதிய அனுபவம். முதன்மை நாயகியாக, சாகசமான பாத்திரத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். என்கிறார் பார்வதி நாயர்.