தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கி.பி.1809ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் அய்யா வைகுண்டர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அய்யா வைகுண்டர் பிற்காலத்தில் ஆன்மீக குருவாக மாறினார். அய்யாவழி என்ற பெயரில் அவரை பல லட்சம் மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வாழ்க்கை தற்போது சினிமா ஆகிறது. ஒரு குடைக்குள் என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தை பொன் செல்வராஜ், விஷ்ணுவதி, உதயகுமார், சுனிதா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். வைகுண்டர் வேடத்தில் ஆனந்த் என்ற புதுமுகம் நடிக்கிறார். அவருடன் மேக்னா ராஜ், மாஸ்டர் தினேஷ், நிரோஷா, கருத்தம்மா ராஜஸ்ரீ, இளவரசு நடிக்கிறார்கள். வி.ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். தேவா இசை அமைக்கிறார். கே.எல். உதயகுமார் இயக்குகிறார்.
இதில் வைகுண்டரின் அவதாரம், அவர் பக்தர்களுக்கு அருளிய அற்புதங்கள், அவரது முழு வாழ்க்கை இடம் பெறுகிறது. கன்னியாகுமாரி மாவட்டத்தை சுற்றி படப்பிடிப்பு நடக்கிறது.