அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
தமிழ் சினிமாவில் அருவா, டாடா சுமோ ஆகியவற்றை அதிகம் காட்டிய இயக்குனர்களில் ஹரி முக்கியமானவர். விக்ரமிற்கு 'சாமி', சூர்யாவிற்கு 'சிங்கம்' என அவர்களுக்கு கமர்ஷியலாக மிகப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்தவர்.
அவரது மச்சானான அருண் விஜய் முன்னணிக்கு வந்த பிறகு அவரை வைத்து படம் இயக்குவீர்களா என பல முறை கேட்ட போதும் அதைத் தவிர்த்தே வந்தார். சூர்யாவுடன் இணைந்து புதிய படமொன்றை ஹரி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பெல்லாம் வெளியிட்டார்கள். ஆனால், திடீரென அந்தப் படத்தையே கைகழுவி விட்டார்கள்.
இதனால், நொந்து போன ஹரிக்கு உடனடியாக கை கொடுத்தார் மச்சான் அருண் விஜய். இருவரும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு முன்னரே வெளிவந்தது. இன்று அப்படத்தை பூஜையுடன் ஆரம்பித்துள்ளார்கள்.
விக்ரம், சூர்யா ஆகியோர் வேறு ஒரு தளத்தில் செல்ல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஹரி, அது போலவே தனது மச்சான் அருண் விஜய்க்கும் ஒரு கமர்ஷியல் திருப்புமுனையைத் தருவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.