போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது? | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் |
யதார்த்தமான பல திரைப்படங்களைக் கொடுப்பதில் மலையாள சினிமாவிற்கு நிகர் வேறு எதுவுமில்லை. பல வருடங்களாகவே மலையாள சினிமாவில் அப்படியான படங்கள் வெளிவந்து இந்திய அளவில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளன.
அந்த வரிசையில் ஜனவரி மாதம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ஒரு படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் பலர் நடித்த படம் இது.
பழமையில் ஊறிப் போன ஒரு மலையாளக் குடும்பத்தில் புது மணமகளாகச் செல்லும் பெண்ணுக்கு அந்த வீட்டின் பழக்க வழக்கங்கள் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் இப்படத்தின் கதை.
சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படத்தில் 1 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு அந்த பழமையான வீட்டின் சமையலறைதான் பிரதான கதைக்களமாக இருக்கும்.
அதிலேயே பலவிதமான கோணங்களில் பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாக இப்படத்தைக் கொடுத்திருந்தார் இயக்குனர் ஜியோ பேபி. மலையாள சினிமாவுக்கே உரிய ஒரு ஸ்பெஷலான படம் இது.
அந்த மாதிரியான கதை சொல்லாடல், காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பொருத்தமாக இருக்குமா என்பது சந்தேகம்தான். அந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
அப்படத்தை உள்ளது உள்ளபடியே ரீமேக் செய்தால் தமிழ் ரசிகர்களைக் கவர்வது எளிதல்ல. தமிழ் ரசிகர்களுக்காக மாற்றங்கள் செய்கிறேன் என பாடல்கள், வேறு கூடுதல் காட்சிகள் எனச் சேர்த்தால் அது ஒரிஜனல் படத்தின் தரத்தைக் குறைத்துவிடும்.
ஹிந்தியில் வெளிவந்து விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட 'டெல்லி பெல்லி' படத்தை தமிழில் 'சேட்டை' என ரீமேக் செய்து தோல்வியடைய வைத்த இயக்குனர் கண்ணன் தான் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.