வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

ஒரு காலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு தற்போது கையில் படங்கள் இல்லை. அவர் நடித்து முடித்துள்ள மஹா என்ற படம் மட்டும் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதனால் மும்பையில் உள்ள வீட்டிலேயே செட்டிலாகிவிட்ட ஹன்சிகா, கொரோனா காலத்தில் யூ டியூப் சேனல் தொடங்கி நடத்தி வந்தார். தற்போது இசை ஆல்பங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.
முதல் இந்தி ஆல்பமாக வெளியான பாடி ஷேக் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் மாஸா என்ற அடுத்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். யு டியூப்பில் வெளியான முன்றே தினங்களில் 20 மில்லியன் பார்வைகளை குவித்து சாதனை படைத்திருக்கிறது.
இந்தி இசை அமைப்பாளர் பிராக், பாடலை இசையமைத்து உருவாக்கி பாடியுள்ளார். அர்விந்தர் கைய்ரா இயக்கி உள்ளார். காதலின் பல்வேறு பரிணாமங்களை சொல்வதாக இந்த ஆல்பம் உருவாகி உள்ளது. இதில் ஹன்சிகா காதலில் உருகி உருகி ஆடியிருக்கிறார்.




