தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியின்றி தலைவராக பாரதிராஜா முயற்சித்தார். அது நடக்காததால் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற போட்டி சங்கத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கினார்.
நிர்வாகிகள் இன்றி தனி அதிகாரியால் நிர்வகிக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு தலைவராக முரளி ராமசாமி வெற்றி பெற்றார். பெரும்பாலான பொறுப்புக்கு அவரது அணியினர் வந்தனர்.
ஒரே ஒரு தயாரிப்பாளர் சங்கம் தான் இருக்க வேண்டும். நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள் தாய் சங்கத்தில் வந்து சேருமாறு புதிய நிர்வாகம் அழைப்பு விடுத்தது. இதனை நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜா சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது தாய் சங்கம். கொரோனா பரவல் நேரத்தில் பாரதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கினார். தற்போது தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட தாய் சங்க நிர்வாகம் செயல்படுகிறது. இதில் உறுப்பினராக இருந்து கொண்டு போட்டியாக சங்கம் நடத்துவது முறையல்ல. எனவே பாரதிராஜா தவிர்த்து நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். விளக்கம் பெற்ற பிறகு சங்க விதியின்படி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும். என்றார்.