இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியுள்ள படம் டெடி. டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற 12ம் தேதி வெளிவருகிறது. ஆர்யா, அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளனர். இமான் இசை அமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்தின் கதை என்ன என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஸ்ரீ வித்யா ஒரு இளம் மாணவி, கல்லூரி சுற்றுலா பயணத்தின் போது ஒரு விபத்தில் சிக்கி ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இந்த மருத்துவமனை ஸ்ரீவித்யா உதவியற்று, தனியாக இருப்பதால் அவரை, மருத்துவ பலன்களுக்கு பயன்படுத்திக் கொள்ள, செயற்கையாக கோமாவில் வைக்கின்றனர்.
பேச்சுதிறன் கொண்ட கரடி பொம்மையான டெடி, ஸ்ரீ வித்யாவின் அவல நிலையை அறிந்ததும், அவரது உயிரைக் காப்பாற்ற தீர்மானிக்கிறது. ஆனால் இதனை அதனால் தனியாக செய்ய முடியாது. சிவா என்ற பலசாலி இளைஞன், ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதை டெடி காண்கிறது. மேலும் ஸ்ரீவித்யா விசயத்தில் அவனது உதவியை நாட முடிவு செய்கிறது. டெடி, சிவாவிடம் ஸ்ரீவித்யாவின் முழு கதையையும் சொல்கிறது, இருவரும் ஸ்ரீ வித்யாவைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்கின்றனர். பின்னர் நடக்கும் சாகசங்களே படம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.