தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் 'ஆதி புருஷ்'. ராமாயணத்தை மையமாகக் கொண்டு பல கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ள இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் நடிக்க உள்ளனர்.
சீதா கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், தற்போது அக்கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேசி வருவதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த', மகேஷ் பாபுவுடன் 'சர்க்காரு வாரி பாட்டா', செல்வராகவனுடன் 'சாணி காயிதம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
சீதாவாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்குக் கிடைத்தால் அதன் மூலம் அவர் ஹிந்திக்குச் செல்லவும் வாய்ப்பாக அமையும். ஏற்கெனவே அஜய் தேவகன் நடிக்கும் 'மைதான்' படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டியவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், மிகவும் இளமையாக இருப்பதால் அக்கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று அப்படத்திலிருந்து விலகினார்.
'ஆதி புருஷ்' படத்தில் கீர்த்தி நடிப்பாரா இல்லையா என்பது விரைவில் தெரிய வரும்.