பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் |
தெலுங்கில் மோகன்பாபு நாயகனாக நடிக்கும் படம் 'சன் ஆப் இந்தியா'. டயமண்ட் ரத்னபாபு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் ஒன்று உள்ளது. கடவுள் ராமனை புகழ்ந்து வேதாந்த ரகுவீரர் பாடிய ராகத்தில் எனக்கு ஒரு பாடல் வேண்டும் என இளையராஜாவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் மோகன்பாபு. இது கடினம், சவாலான விஷயம் என்று அவர் கூறியபோதும் உங்களால் முடியும் என மோகன்பாபு தெரிவித்துள்ளார். இளையராஜாவும் அந்த சவாலை ஏற்று நான் பண்ணுகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த பாடல் எப்படி வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எழுந்துள்ளது.