'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமா காமெடியன்களில் தனது உடல்மொழி காமெடியால் பெருவாரியான ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. ஆனபோதிலும், தேர்தல் பிரச்சாரம் மற்றும் டைரக்டர்களுடன் விவகாரம் என சில சலசலப்புகளால் கடந்த பல ஆண்டுகளாகவே படவாய்ப்பு இல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்த கிடக்கிறார் வடிவேலு. ஒருநாள்கூட ஓய்வில்லாமல் நடித்து வந்த வடிவேலுவிற்கு ஒரு படம்கூட இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதே என்று சக சினிமா கலைஞர்களெல்லாம் அவரது நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலு பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, ''உங்களுக்கெல்லாம் ஒரு வருடம் தான் லாக்டவுன். ஆனால் நான் பத்து வருடம் லாக்டவுனிலேயே இருக்கிறேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு உள்ளது, ஆனால் வாய்ப்பு தருவதில்லை என பேசியிருக்கிறார். அதோடு, கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் கண்கலங்கி பாடினாராம்.