2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

வருகிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆள்பிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி உள்ளன. இந்த தேர்தலில் கமல்ஹாசனை தவிர மக்களை ஈர்க்கும் நட்சத்திர தலைவர்கள் யாரும் இல்லை என்பதால் திரைப்பட நட்சத்திரங்களை பிரச்சார பீரங்கிகளாக்க கட்சிகள் தனி டீம் போட்டு தேடி வருகிறார்கள்.
அரசியல் கட்சிகளில் ஆர்வத்தை புரிந்து கொண்ட நடிகர், நடிகைகள் யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்கள் மேடையில் முழங்க தயாராகி வருகிறார்கள். யாரும் எதிர்பாராத வகையில் பல நடிகர்கள், நடிகைகள் வருகிற தேர்தலில் பிரச்சார பீரங்கிகளாக வெடிக்கக் கிளம்புகிறார்கள். அவர்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்க எல்லா கட்சியிலும் தனி யூனிட்டை உருவாக்கி இருக்கிறார்கள்.