ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. 50 சதவீத இருக்கைகளுடன் வெளிவந்த இந்தப் படம் வட இந்திய மாநிலங்களைத் தவிர உலகம் முழுவதும், தென்னிந்தியாவிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
கொரோனா தொற்றால் தியேட்டர்கள் பக்கம் வராமல் இருந்த மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைத்ததில் 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே முக்கிய பங்குண்டு. கடந்த ஜனவரி 29ம் தேதி ஒடிடி தளத்திலும் 'மாஸ்டர்' வெளியானது. இருப்பினும் பல ஊர்களில் தியேட்டர்களிலும் இன்னும் மக்கள் வந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நாளையுடன் படம் வெளிவந்து 25 நாளாகப் போகிறது. இந்த 25 நாட்களில் படம் 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கை ஏற்படுத்தி வருகின்றனர்.
50 சதவீத இருக்கைகளிலேயே 250 கோடி ரூபாய் வசூல் என்பது சினிமா வியாபாரத்தில் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ஓடிடி தளத்தில் மட்டும் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் 300 கோடி ரூபாய் வசூலைக் கூடத் தொட்டிருக்கும் என்கிறார்கள்.