காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இயக்கியுள்ள நான்கு கதைகளைக் கொண்ட 'குட்டி ஸ்டோரி' படத்தின் டிரைலர் வெளியீடு இன்று(பிப்., 5) நடைபெற்றது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் நான்கு இயக்குனர்களும் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் கலந்து கொண்டனர்.
கவுதம் மேனன் இயக்கியுள்ள கதையில் அவரும், அமலா பால் நடித்துள்ளனர். விஜய் இயக்கியுள்ள கதையில் அமிதாஷ், மேகா ஆகாஷ் ஆகியோரும், வெங்கட் பிரபு இயக்கியுள்ள கதையில் வருண், சாக்ஷியும், நலன் குமாரசாமி இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி, 'அருவி' அதிதி பாலன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தக் குறும்படத்தில் விஜய் சேதுபதி அவராகவே விரும்பி நடிக்க வந்தார் என இயக்குனர் நலன் குமாரசாமி பேசுகையில் தெரிவித்தார். “இந்தப் படத்தை இயக்க முடிவு செய்ததும் என்னுடைய கதையில் நடிக்க வைப்பதற்காக ஒரு நாயகி எப்படி நடிக்கிறார் என விஜய் சேதுபதியிடம் கேட்டேன். அவர், இப்ப என்ன பண்ற என என்னிடம் கேட்க இந்தக் கதையைப் பற்றி அவரிடம் கூறினேன். கதையைக் கேட்டதும் அவரே இதில் நடிக்கிறேன் எனச் சொல்லி விரும்பி நடிக்க வந்தார்,” என்றார்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் இதுவரை இயக்கிய 'சூது கவ்வும், காதலும் கடந்து போகும்' இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி தான் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.