லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் அக்டோபர் மாதம் முதல் படிப்படியாகத் திறக்கப்பட்டன. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதையே மாநில அரசுகளும் பின்பற்றின. இந்த மாதம் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு முதலில் அனுமதி வழங்கியது. அதையடுத்து தென்னிந்தித் திரையுலகத்தில் உள்ள மற்ற மொழி திரையுலகினரும் அந்தந்த மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கின. கேரளா அரசு பிப்ரவரி மாதம் முழுவதும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றது-. தற்போது தெலங்கானா அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைத் தவிர மற்ற தென்னிந்திய மாநிலங்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து பலரும் தங்களது படங்களை வெளியிட ஆலோசித்து வருகின்றனர். கடந்த வருடங்களில் வெளிவராமல் முடங்கிப் போன பல படங்கள் அடுத்த சில மாதங்களில் தொடர்ச்சியாக வெளிவர உள்ளன.