நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபாஸ் நடித்து வரும் சலார் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் ஆந்திராவிலும், மும்பையிலும் நடைபெற்று வருகின்றன. தற்போது பிரபாஸ் ஆந்திராவில் சலார் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டு இருந்தாலும், மும்பையில் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் துவங்கப்பட்டது. பிரபாஸ் மற்றும் வில்லனாக நடிக்கும் சயீப் அலிகான் ஆகியோர் இல்லாமலேயே படபிடிப்பை துவங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக முதல் நாளே இந்தப்படத்திற்காக போடப்பட்டிருந்த செட்தில் தீ விபத்து ஏற்பட்டது, நல்லவேளையாக படக்குழுவினர் சிறிய காயங்கள் கூட இல்லாமல் தப்பித்தனர்.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் பட்ட காலிலேயே படும் என்பது போல பிரபாஸ் தற்போது நடித்து வரும் சலார் படக்குழுவினர் சிலர் சாலை விபத்தில் சிக்கிய அடுத்த அதிர்ச்சிகரமான நிகழ்வும் நடந்துள்ளது. சலார் படப்பிடிப்பு முடித்து நேற்று மாலை தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பும்போது, படக்குழுவினர் வந்த வேன் ஒன்றின் மீது லாரி ஒன்று மோதி விபத்திற்கு ஆளானது. இதில் காயமடைந்த படக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகுபலி சமயத்தில் நான்கு வருடங்களுக்கு ஒரு படம் என நடித்து வந்த நடிகர் பிரபாஸ், தற்போது ஆச்சர்யமாக ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதற்கெல்லாம் திருஷ்டி பட்டுவிட்டது போல இப்படி அடுத்தடுத்த விபத்துகள் நடந்துள்ளதாக படக்குழுவினரில் சிலர் பேசிக்கொள்கின்றனர்.