விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி | 'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ? | 'ஜனநாயகன்' வழக்கு விவகாரம் : அடுத்து என்ன நடக்கலாம்? | மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி |

தமிழில் யுவன் யுவதி படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல். ஷோபனா, மஞ்சு வாரியரை போலவே, நடிகை ரீமா கல்லிங்கலும் நாட்டியத்தில் வல்லவர். அதனாலேயே பல மாணவர்களுக்கு நடனப்பயிற்சி அளிக்கும் விதமாக 'மாமாங்கம்' என்கிற நாட்டிய பள்ளியை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு துவங்கினார். நடிகை, தயாரிப்பாளர், நாட்டியப்பள்ளி நிறுவனர் ஒரே நேரத்தில் மூன்று வேலைகளையும் கவனித்து வந்த ரீமா கல்லிங்கல் தற்போது தனது நாட்டியப்பள்ளியை மூடுவதாக அறிவித்துள்ளார்,
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த கொரோனா காலகட்டம் எனது நாட்டியப் பள்ளியையும் விட்டு வைக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி இதை மூடுகிறேன். இந்த இடத்தில் நடனம் சொல்லி தந்தது, நடன ஒத்திகை பார்த்தது, திரைப்படங்களை திரையிட்டது, ஒர்க்ஷாப் நடத்தியது என பசுமையான நினைவுகள் நிறைய உள்ளன. நாட்டியப்பள்ளி தான் மூடப்படுகிறதே தவிர வரும் காலங்களில் மேடை நாடகங்களை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம்” என கூறியுள்ளார் ரீமா கல்லிங்கல்




