27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ | நேர்மையாக இருந்தால் ஜொலிக்கலாம் நடிகர் குரு லக் ஷ்மண் | பிளாஷ்பேக்: பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் முதல் வண்ணத்திரைக் காவியங்களை அலங்கரித்த 'மக்கள் திலகம்' எம் ஜி ஆர் | ராஜபார்ட் ரங்கதுரை, வாலி, காஞ்சனா 3 - ஞாயிறு திரைப்படங்கள் | படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' |
தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்திய கிரிக்கெட் அணியல் இடம்பெற்று சாதனை படைத்து வருகிறவர் நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியினருடன் வலைப்பயிற்சி பவுலராக சென்ற நடராஜன் அந்த தொடரில் ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் போட்டியில் விளையாடி பந்து வீச்சில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.
இந்திய அணியில் அவர் இடம்பெற்ற கதை ஒரு சினிமாவுக்கான அம்சங்களை கொண்டிருப்பதாலும், தமிழ் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக நடராஜன் மாறி இருப்பதாலும், அவரது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். சில இயக்குனர்கள் இதுகுறித்து நடராஜனை சந்தித்தும் பேசி இருக்கிறார்கள். ஆனால் என் கதையை சினிமாவாக எடுப்பதில் தனக்கு ஆர்வமில்லை என்று தெரிவித்து விட்டார் நடராஜன்.
நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் இதுகுறித்து கூறியதாவது: ஆஸ்திரேலிய தொடர் முடிந்து வந்த பிறகு இன்னும் கூட ரசிகர்கள் பலர் என்னை பார்க்க வீட்டுக்கு வருகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருந்தாலும், வித்தியாசமான அனுபவமாக உள்ளது. தற்போது வெளியில் கூட போக முடியவில்லை. முன்பு போல் இயல்பாக வெளியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். பழனி கோவிலுக்கு சென்று மொட்டை போட்டு விட்டு திரும்பும் போது கூட பலரும் என்னை அடையாளம் கண்டு பாராட்டினார்கள்.
நான் எப்பொழுதும் சாதாரணமான மனிதனாக இருக்கவே விரும்புகிறேன். எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் சிலர் சந்திக்க வீடு தேடி வந்தனர். ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை. கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்தவே விரும்புகிறேன். என்றார் நடராஜன்.