ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
ஆரம்பத்தில் சிறிய பட்ஜெட் படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால், அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் காலா படங்களில் நடித்த பிறகு அனைவரையின் கவனத்தையும் ஈர்த்து விட்டார். யதார்த்மாக அமைந்ததா? இல்லை சாக்ஷி தேடித் தேடி நடிக்கிறாரா என்று தெரியவில்லை. அவர் நடித்து வரும் சிண்ட்டரல்லா, டெடி, அரண்மணை 3, ஆயிரம் ஜென்மங்கள் படங்கள் அனைத்துமே த்ரில்லர் படங்கள் தான்.
இந்த நிலையில் தற்போது, தி நைட் என்ற த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் அவர் சோலோ ஹீரோயின். அவருடன் விது என்ற புதுமுகம் நடிக்கிறார். இது அனிமல் த்ரில்லர் வகை படம். தன் காதலனுடன் காட்டுக்குள் செல்லும் சாக்ஷி, அங்கு மிருகமாக மாறும் ஒரு கொடூர மனிதனிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அவனிடமிருந்து எப்படி தப்பித்து வருகிறார்கள் என்பதுதான் கதை.
இதனை யுவன் சங்கராஜாவின்டம் சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றிய ஜே.செல்வம் தயாரிக்கிறார், அன்வர் கான் இசை அமைக்கிறார், ஜி.ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், ரங்கா புவனேஸ்வர் இயக்குகிறார். கொடைக்கானல் காடுகளில் படமாகிறது.