கைதி பாணியில் உருவாகியுள்ள வீர தீர சூரன் | சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பவன் கல்யாண்? | இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி | பிளாஷ்பேக் : ஏகாதசி விரதத்தை பிரபலமாக்கிய படம் | துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை | வீர தீர சூரன் OTT-யில் வருமா? வராதா? | நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்" | எல் 2 எம்புரான் - முதல் நாள் முன்பதிவிலும் சாதனை | ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ் |
'இறுதிச் சுற்று, ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சஞ்சனா நடராஜன். இதுதவிர குரு, நோட்டா, ஜகமே தந்திரம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள படம் 'போர்'. இதில் அவர் மருத்துவ மாணவியாக நடித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சனா நடராஜன் கூறியிருப்பதாவது : இந்த படத்தில் நான் ரிஷிகா என்ற மருத்துவ மாணவியாக நடித்திருக்கிறேன். கிட்டத்தட்ட எனது நிஜ கேரக்டரை பிரதிபலிக்கிற மாதிரியான கேரக்டர். நண்பர்கள் குழுவைச் சுற்றி சுழலும் இந்தக் கதை அவர்களின் கடந்த கால சம்பவங்கள் எப்படி தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பதைக் கூறும். இது அரசியல் விஷயங்களைப் பேசுவதோடு, சில சமூகப் பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறது. படக்குழுவில் உள்ள அனைவரும் உற்சாகத்தோடு வேலை செய்தோம். இயக்குநர் பிஜாய் நம்பியாரும் படத்தை தெளிவான பார்வையோடு கொண்டு சென்றார். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கதை நிஜ சம்பவங்களின் அடிப்படையில் உருவானது" என்கிறார் சஞ்சனா நடராஜன்.