ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், காதல் தோல்வியால் சில காலம் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது அதிலிருந்து மீண்டு, படங்களில் மீண்டும் பிஸியாகி உள்ளார். சமீபத்தில் தெலுங்கில் ரவிதேஜாவுடன் அவர் நடித்த கிராக் படம் வெளியானதில் இருந்து மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. முக்கியமாக பிரபாசுடன் சலார் படத்தில் கமிட்டாகி உள்ளார் ஸ்ருதி.
இதுப்பற்றி ஸ்ருதி கூறுகையில், ''சில காலம் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்புகள் இல்லை என்றபோதும் கிராக் படத்திற்கு பிறகு லக்கி நடிகையாக மாறியிருக்கிறேன். பிரபாசுடன் கமிட்டாகியிருக்கும் சலார் படம் எனது சினிமா பயணத்தில் மீண்டும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எனது கேரியரில் மிகவும் மகிழ்ச்சியான கட்டத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.