மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
இயக்குனர் ஹரி தொடர்ந்து அதிரடி ஆக்சன் படங்களாக இயக்கி வருகிறார். சூர்யா நடிப்பில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2, சிங்கம்-3 என வரிசையாக இயக்கினார். அதேபோல் விக்ரம் நடிப்பில் சாமி, சாமி-2 படங்களை இயக்கினார். இந்த படங்கள் எல்லாமே ஒரே மாதிரியான போலீஸ் கதைகள் தான் என்றாலும், திரைக்கதையின் வேகத்தில் முந்தைய சாயல்களை வெளியில் தெரியாத அளவுக்கு செய்து விடுவார் ஹரி.
ஆனபோதும் சிங்கம் -3, சாமி -2 படங்கள் எதிர்பார்த்த படி வெற்றி பெறவில்லை. அதையடுத்து அருவா படத்தை சூர்யாவை வைத்து இயக்குவதாக கூறி வந்த ஹரி, பின்னர் விக்ரமை வைத்து இயக்கப்போவதாக சொன்னார். ஆனால் இப்போது அவர்கள் இருவருமே இல்லாமல் அவரது மைத்துனர் அருண் விஜய் அந்த படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் அருவா படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இதற்கு முன்பு ஹரி இயக்கிய சேவல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ், நீண்ட இடைவேளைக்குப்பிறகு இப்படத்தில் இணைகிறார்.