விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
நடிகர் விவேக் சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். விவேகானந்தர் சொன்ன ஒரு கருத்தினை மாணவர்களுக்காக டுவிட்டரில் பதிவிட்டார். அதற்கு ஒரு நெட்டிசன், நம்முடைய மாணவர்கள், விவேகானந்தர் சொன்னதை படிக்க மாட்டார்கள். அஜித், விஜய் என்றால் தான் படிப்பார்கள் என்று பதிவிட்டார். அதற்கு பதிலளித்த இன்னொரு நெட்டிசன், 'ஆமா கூத்தாடிங்க மக்கள அப்படி ஆக்கி வச்சுருக்காங்க...என்ன விவேக்' என பதிவிட்டார்.
இதற்கு விவேக், ''கூத்தாடின்னு சொல்லீட்டு ஏன் சார் எங்க குடும்ப கூத்தாடிய profile dp யா வச்சிருக்கீங்க? கலைஞர்களை கூத்தாடி என்று நீங்கள் சொல்வதால் நாங்கள் சிறுமைப்படுவதில்லை. பெருமைதான்! அந்த சிவனே மன்றில் ஆடுவது கூத்து தானே!!'' என பதில் கொடுத்தார்.