சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் படம் பொங்கல் விருந்தாக ஜன., 13ல் தியேட்டரில் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய படம் கொரோனா பிரச்னையால் 8 மாதங்களுக்கு பின் வெளியானது.
இப்படத்தை ஓடிடியில் வெளியிட அந்த நிறுவனங்கள் பெரும் விலை கோரிய நிலையில் தியேட்டரில் தான் படம் வரும் என்பதில் விஜய் உள்ளிட்ட படக்குழு உறுதியாக இருந்தது. தியேட்டர் உரிமையாளர்களும் இப்படம் தியேட்டரில் வெளியானால் தான் மக்கள் மீண்டும் தியேட்டருக்கு வருவார்கள் என நம்பினர். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தபோது வசூல் சிறப்பாகவே உள்ளது கடந்த இரு வாரங்களில் மட்டும் 50 சதவீத இருக்கைகளில் இப்படம் ரூ.200 கோடி வசூலை தொட்டுள்ளது.
தற்போது சற்று மக்கள் கூட்டம் குறைந்தாலும் வார இறுதி நாட்களில் ஓரளவுக்கு கூட்டம் வருகிறது. இந்நிலையில் இப்படம் டிஜிட்டல் தளமான ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்தியா உள்ளிட்ட 240 நாடுகளில் உள்ள பிரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29 முதல் மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் கண்டு மகிழலாம்.
இதுப்பற்றி நடிகர் விஜய் கூறுகையில், ஜான்(விஜய்) மற்றும் பவானிக்கும்(விஜய் சேதுபதி) இடையிலான சுவாரஸ்ய மோதல்கள் பார்வையாளர்களுக்கு ஒரு ஆக்ஷன் ரோலர் கோஸ்டர் பயணமாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் அமேசான் பிரைம் விடியோவில் இப்படத்தை பார்த்து ரசிப்பதில் மகிழ்ச்சி என்றார்.
லோகேஷ் கனகராஜ் கூறுகையில், மாஸ்டர் படம் இரண்டு வலிமையான நடிகர்கள் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் கொண்டுள்ளது. இது மக்களை திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கச் செய்யும் காரணிகளாக அமைந்துள்ளது. எனினும், அமேசான் ப்ரைம் வீடியோவில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாவதன் மூலம் வீட்டில் உள்ள பார்வையாளர்களையும், சாத்தியமற்ற பகுதிகளையும் அடைய நாங்கள் விரும்புகிறோம் என்றார்.




