பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

கடந்த 1991ல் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'கேங்லீடர்'. விஜயா பப்பிநீடு என்பவர் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக விஜயசாந்தி நடிக்க, முக்கிய வேடங்களில், அதாவது சிரஞ்சீவியின் அண்ணனாக நடிகர் முரளி மோகன் மற்றும் தம்பியாக சரத்குமார் நடித்திருந்தனர். இந்தப்படம் வெளியாகி முப்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த அண்ணன் தம்பிகள் மூவரது சந்திப்பும் கூட, 30 வருடங்கள் கழித்து தற்போது எதிர்பாரதவிதமாக அரங்கேறியுள்ளது.
ஆம்.. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் இவர்கள் மீண்டும் ஒன்றாக சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டுள்ளனர். சிரஞ்சீவி ஆச்சார்யா படப்பிடிப்பிற்காகவும், சரத்குமார் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்காகவும், முரளி மோகன் வேறு ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பிற்காவும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தற்போது தங்கி இருக்கின்றனர். அப்போது தான் ஏதேச்சையாக இவர்கள் மூவரது சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.