ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

நடிகை பார்வதி மலையாளத்தில் தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் ஊரடங்கு தளர்வுக்கு பின் அவர் நடித்த படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. இந்தநிலையில் இந்தப்படத்திற்கு 'ஆர்க்கறியாம்' (யாருக்கு தெரியும்) என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்தப்படத்தின் டீசரை கமல்ஹாசன் மற்றும் பஹத் பாசில் இருவரும் தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்,
உத்தமவில்லன் படத்தில் கமலின் மகளாக பார்வதி நடித்திருந்தார் என்றாலும், கமல் இந்த படத்தின் டீசரை வெளியிட்டது படத்தின் இயக்குனர் மற்றும் எடிட்டர் இருவரின் நட்புக்காகத்தான். ஆம்.. கமலின் விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷானு ஜான் வர்கீஸ் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விஸ்வரூபம் படத்திற்கு படத்தொகுப்பு செய்த மகேஷ் நாராயணன் தான் இந்தப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
பிஜுமேனன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படம் வரும் பிப்-26ல் ரிலீஸாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் ஆரம்பித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் மும்பையிலிருந்து கேரளாவுக்கு, ரயிலில் பயணிக்கும் ஒரு தம்பதி, ஊரடங்கால் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது.