மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
துருவங்கள் பதினாறு என்கிற வெற்றி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அதை தொடர்ந்து நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார்.. சில சிக்கல்களால் அதை வெளியிட முடியவில்லை. அதேசமயம் அதற்கடுத்து அருண்விஜய்யை வைத்து இவர் இயக்கிய மாபியா படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்தநிலையில் தற்போது தனுஷ் நடிக்கும் அவரது 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கான மற்ற நட்சத்திரங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார் கார்த்திக் நரேன். இந்தநிலையில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் நண்பர்களில் ஒருவராக பைலட்டாக நடித்திருந்த கிருஷ்ணகுமார், தற்போது இந்தப்படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார்த்திக் நரேனே வெளியிட்டுள்ளார்.