பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக விளங்கும் மகேஷ்பாபுவுக்கு, அவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்கள் தான் ஒக்கடு மற்று போக்கிரி. இதில் ஒக்கடு படம் வெளியாகி நேற்றுடன் 18 வருடங்கள் முடிவடைந்து விட்டது. குணசேகர் இயக்கத்தில் மகேஷ்பாபு, பூமிகா, பிரகாஷ்ராஜ் நடித்த இந்தப்படத்தை தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ தயாரித்திருந்தார். இந்தப்படம் தான் பின்னாளில் விஜய் நடிக்க 'கில்லி'யாக ரீமேக் ஆனது.
ஒக்கடு படத்தின் 18ஆம் வருட கொண்டாட்ட புகைப்படத்தை மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் அதில் தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இது தயாரிப்பாளரை ரொம்பவே வருத்தப்பட வைத்துவிட்டது..
“தவறுகள் நிகழ்வது சகஜம் தான் பாபு.. 18ஆம் வருட கொண்டாட்டத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டபோது நம்ரதா என் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார்.. ஆனாலும் அவரது பேவரைட் படம் இதுதான் என குறிப்பிட்டுள்ளாரே, அதுவே எனக்கு மகிழ்ச்சி தான்” என அதுகுறித்து வருத்தப்பட்டு பதிவிட்டிருந்தார் தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ.
அதை தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட நம்ரதா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ பெயரையும் சேர்த்துக்கொண்டுள்ளார்.