டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது படங்களைப் பற்றிய சில அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவர் தெலுங்கில் வில்லனாக நடிக்கும் 'உப்பெனா' படத்தின் போஸ்டர் இன்று காலை வெளியானது.
அடுத்து விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படமான 'காந்தி டாக்ஸ்' படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மராத்தியில் இதற்கு முன் 'சா சசுச்சா, யெதா' ஆகிய படங்களை இயக்கிய கிஷோர் பாண்டுரங் பெலேகர் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படம் பற்றி டுவிட்டரில், “சில நேரங்களில் மௌனம் தான் அதிகம் ஒலிக்கும். எனது பிறந்தநாளை முன்னிட்டு, எனது அடுத்த படத்தின் போஸ்டரை வெளியிடுகிறேன். 'காந்தி டாக்ஸ்', ஒரு புதிய சவால் மற்றும் ஆரம்பம் எனக்காக....தயாராக இருக்கிறேன், உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்,” என விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.
சில இடங்களில் சில விஷயங்கள் நடக்க பணம் இருந்தால் தான் முடிக்க முடியும். அப்போது 'பணம் பேசும்' என்று சொல்வதற்குப் பதிலாக பலர் 'காந்தி பேசும்' என வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள். அதையே ஆங்கிலத்தில் 'காந்தி டாக்ஸ்' என படத்தின் தலைப்பாக வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தி, மராத்தி என மொத்தம் ஆறுமொழிகளில் இப்படம் தயாராக உள்ளதாம்.
'காந்தி' பெயரை எப்படி இது போல பயன்படுத்தலாம் என யாரும் சர்ச்சை எழுப்பாமல் இருப்பார்களா ?.




