துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் எத்தனை நாட்களில் 100 கோடி வசூலைக் கடக்கிறது என்பதுதான் அவர்களின் படங்கள் வெளியாகும் போது இருக்கும் முக்கிய பேச்சாக இருக்கும்.
விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளிவந்து மூன்று நாட்களாகிவிட்டது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 100 கோடி வசூலைப் படம் தொட்டுவிட்டதாக டுவிட்டரில் பகிர ஆரம்பித்துவிட்டார்கள்.
கொரோனா தொற்று பாதிப்பால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. அதிலேயே மாஸ்டர் இந்த மகத்தான சாதனையைப் புரிந்துவிட்டதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் 55 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 10 கோடி, கேரளாவில் 5 கோடி, கர்நாடகா, வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசூல் என 30 கோடி, ஆக மொத்தம் 100 கோடி வசூல் என ஒரு கணக்கு சொல்கிறார்கள்.
முதல் நாள் வசூல் 25 கோடி என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அப்படியே இந்த 3 நாளில் 100 கோடி வசூல் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால் விஜய் ரசிகர்கள் கூடுதலாகக் கொண்டாடுவார்கள்.