டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தற்போதைய தலைவர் ரவிவர்மா தலையில் ஒரு அணியினரும், மனோபாலா தலைமையில் ஒரு அணியினரும் செயல்பட்டு வருகிறார்கள். இரு அணியினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தார்கள். இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத் தலைவர் ரவிவர்மா நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த மூன்று மாத காலமாகச் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நிர்வாகத்தினர் சிலரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை நீடித்து ஒரு குழப்பமான நிலை நிலவியது. இப்போது அந்த பிரச்சினை தீர்ந்து சூழ்நிலை தெளிவாகியுள்ளது. சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அப்போது தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டன
பொதுக்குழு உறுப்பினர்கள் என் தலைமையிலான சங்கம் தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதற்குரிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் புதிய பொதுச் செயலாளராக எம்.டி.மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மனோபாலா ராஜினாமா செய்தார்.
சங்க அலுவலகம் திறக்கப்பட்டுவிட்டது. இனி சங்கத்தின் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெறும். சங்கத்திற்குப் புதிய இடம் வாங்கி கட்டடம் கட்டித் திறப்பு விழா செய்யும் திட்டத்தோடு பணிகளைத் தொடங்குகிறோம். என்றாலும் மனோபாலா தரப்பு குரல் எழுப்பிக் கொண்டிருந்தது.
இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண அனைவரும் விரும்பினோம். மீண்டும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர். கே. செல்வமணி முன்னிலையில் கூடி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 11 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். எனவே இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்து விட்டது.
இவ்வாறு ரவிவர்மா கூறினார்.