பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் |
கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானது 2013ல் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் தான். அதைத் தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு பிறகு மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார் ;அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தில் மீண்டும் அவரது இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரது சிறுவயது தோழர்களான பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், ஆகியோரும் நடித்துள்ளார்கள்.. வரும் டிச-2ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் பதினாறாம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால் கீர்த்தி சுரேஷின் உருவத்திற்கு யாரை மாடலாக எடுக்கலாம் என்கிற கேள்வி எழுந்தது. அதற்காக வேறு எங்கும் தேடாமல் ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்தே கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார்கள். இது சமபந்தமான புகைப்படங்களுடன் படத்தில் தான் நடித்துள்ள சில புகைப்படங்களையும் இணைத்து வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.