நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் மற்றும் பலர் நடிக்கும் 'கேஜிஎப் சேப்டர் 2' படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து பல சாதனைகளைப் புரிந்து வந்த இந்த டீசர் தற்போது ஒரு பெரும் சாதனையை மிகக் குறுகிய காலத்தில் நிகழ்த்தியுள்ளது. இந்தியத் திரைப்படங்களிலேயே அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் மற்றும் டிரைலர்களில் முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
இதற்கு முன்பு இந்தியப் படங்களில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப் மற்றும் பலர் நடித்து 2019ல் யு டியூபில் வெளியான 'வார்' படத்தின் டிரைலர் 126 மில்லியன் பார்வைகளைப் பெற்றதுதான் இதுவரையிலான சாதனையாக இருந்தது.
அந்த சாதனையை நான்கு நாட்களுக்குள்ளாகவே முறியடித்துள்ள 'கேஜிஎப் 2 டீசர்'. தற்போது 128 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள இந்த டீசர், 6.5 மில்லியன் லைக்குகளையும், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது.
'கேஜிஎப் 2' டீசரே இந்த அளவிற்கு சாதனையைப் படைத்துள்ளது என்றால் அடுத்து படத்தின் டிரைலர் வெளிவந்தால் அது எந்த அளவிற்கு சாதனையைப் படைக்கும் என கன்னடத் திரையுலகினர் பெரும் மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.
டீசருக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து இப்படத்தின் வினியோக வியாபாரம் பெருமளவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், நடிகை ரவீனா டான்டன் ஆகியோர் நடித்துள்ளதால் வட இந்தியாவில் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு மிக அதிகமான தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ள 'கேஜிஎப் 2' டீசரின் இந்த பெரும் சாதனைக்கு படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.