லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கே.ஜே.யேசுதாஸின் 81 வது பிறந்தநாளில், சித்ரா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட 28 பிரபல பாடகர்கள் ஒன்று கூடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
கே.ஜே.யேசுதாஸின் 81 வது பிறந்தநாளில், கே.எஸ். சித்ரா, எம்.ஜி.ஸ்ரீகுமார், சுஜாதா மோகன், சீனிவாஸ், வேணுகோபால், பிஜு நாராயணன், உன்னி மேனன் மற்றும் கிருஷ்ணச்சந்திரன் உள்ளிட்ட 28 பாடகர்கள் புகழ்பெற்ற பாடகர் யேசுதாசுக்கு “கந்தர்வ காயகா” என்ற பாடல் மூலம் புகழஞ்சலி செலுத்தினர்.இந்த பாடலை பி.கே.ஹரிநாராயணன் மொழி பெயர்க்க, ஸ்வேதா மோகன் இசையமைத்துள்ளார். இந்த பாடல் இன்று ஸ்வேதாவின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. அதில் வீடியோ விளக்கத்தில் ஒரு சிறிய குறிப்பையும் எழுதியிருந்தார்.
அதில், “இது அனைத்து ரசிகர்களின் சார்பாக, நாடு முழுவதும் பார்த்த மிகச் சிறந்த பாடகர்களுக்காக உருவாக்கப்பட்ட பாடல். எங்கள் கான கந்தர்வனுக்கான இந்த அஞ்சலி, நாம் ஒவ்வொருவரும் தசேட்டன் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதையிலிருந்து பிறந்தது. இது என் பாடல் அல்ல. இது நம் நாடு கண்ட மிகச் சிறந்த பாடகர்களுக்காக, அனைத்து ரசிகர்களின் சார்பாக உருவாக்கப்பட்ட பாடல். நம் இதயத்தில் நாம் உணருவதை வார்த்தைகளாக அழகாக மொழிபெயர்த்த ஹரிநாராயணன் சேட்டனுக்கு நன்றி கூறுகிறேன்.
இந்த பாடலுக்கு தங்கள் மாயாஜால தொடுதலை முழு மனதுடன் வழங்கியதற்காக ராஜேஷ் வைத்யா அண்ணா மற்றும் 27 பாடகர்களில் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த திட்டத்தை தயாரிப்பதில் எனது இடது மற்றும் வலது கையாக இருந்ததற்காக சவுரப் ஜோஷி மற்றும் ஹயக்ரீவ் ஆகியோருக்கும் நான் நன்றி கூறுகிறேன்... நீங்கள் பணியாற்றுவது அருமை. ஒரு பாடலை உருவாக்கும் எனது முதல் முயற்சியை நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். ”
ஷங்கர் மகாதேவன் டுவிட்டரில் “என் அன்பான ஸ்வேதாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! தாஸ் அண்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாட என்ன ஒரு அற்புதமான வழி! 28 பாடகர்கள் பாடிய ஒரு அழகான அமைப்பு! ” என பாராட்டினார்.
“கந்தர்வ கயகா” வீடியோவை நடிகர் மோகன்லால் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷனும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.