ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுசுடன் ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், தேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கடந்த மே மாதம் 1-ந்தேதி அன்றே வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றினால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஜகமே தந்திரம் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டதோடு, ஓடிடி தளங்களிலும் படத்தை வெளியிடவில்லை.
விஜய்யின் மாஸ்டர் படத்தைப் போலவே ஜகமே தந்திரம் படத்தையும் தியேட்டரில் தான் வெளியிடுவோம் என்று ரிலீசை தள்ளி வைத்திருந்தனர். இந்தநிலையில் தற்போது ஜகமே தந்திரம் படத்தை காதல் தினத்தை முன்னிட்டு இருதினங்களுக்கு முன்பாக பிப்., 12 அன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




