ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
தமிழ் நடிகர்களில் விஜய்க்குத்தான் கேரளாவில் ரசிகர்கள் அதிகம். விஜய் நடித்து வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் அங்குள்ள மலையாள ரசிகர்கள் தமிழ் ரசிகர்களைப் போலவே வரவேற்று கொண்டாடுவார்கள்.
ஆனால், பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள 'மாஸ்டர்' படம் கேரளாவில் வெளியாகாத சூழல் ஒன்று உருவானது. கேரளாவில் உள்ள தியேட்டர்களுக்கு அந்த மாநில அரசு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியது. இருப்பினும் மாநில அரசிடமிருந்து பல சலுகைகளை வேண்டி கேரளா பிலிம் சேம்பர் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என்றது.
அதன் காரணமாக 'மாஸ்டர்' படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. அங்கு முன்னணி நடிகர் ஒருவரின் பார்ட்னர் தான் திரைப்பட சங்கம் ஒன்றின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். தமிழ்ப் படமான 'மாஸ்டர்' படம் கேரளாவில் பெரிய அளவில் வெளியாவதை அவர் விரும்பவில்லை என்று கேரள விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
'மாஸ்டர்' படத்தைத் திரையிட முடியாமல் தடை செய்யும் நோக்கில் வேறு ஏதாவது முயற்சிகள் நடந்தால் அதை எதிர்க்கவும் கேரள விஜய் ரசிகர்கள் தயாராக இருந்தார்களாம்.
இந்நிலையில் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என்று சொன்னதை கேரளா பிலிம் சேம்பர் மறு பரிசீலனை செய்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது என்கிறார்கள். அப்படி நடந்தால் 'மாஸ்டர்' படம் கேரளாவில் வெளியாகலாம். விரைவில் இது பற்றிய முழுமையான தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.