'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் சூது கவ்வும். விஜய்சேதுபதிக்கு அடையாளம் கொடுத்த படங்களில் ஒன்று. இதில் பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். காமெடி திருடர்களின் கதை.
தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின் மெண்ட் சி.வி.குமாரே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார். பிரபுதேவா நடித்துள்ள யங் மங் சங் படத்தை இயக்கிய அர்ஜூன் இயக்குகிறார்.
இரண்டாம் பாகத்தில் நடிக்க விஜய்சேதுபதி மறுத்துவிட்ட நிலையில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் முதல்பாகத்தில் நடித்த கருணாகரன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.