'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
இமைக்கா நொடிகள் படத்திற்கு பின் விக்ரமை வைத்து கோப்ரா என்ற படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஜானமுத்து. ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு நாயகியாக மியார் ஜார்ஜ் நடிக்க, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடிகராக களமிறங்கி உள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் விக்ரம் பல தோற்றங்களில் இருந்தார்.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று(ஜன., 9) டீசரை வெளியிட்டுள்ளனர். 1.47 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர் பரபரப்பாக நகருகிறது. படத்தில் மதி என்கிற கோப்ராவாக கணித மேதையாக நடித்துள்ளார் விக்ரம். தன் கணித திறமையை வைத்து அவர் பல வேடங்களில் செய்யும் செயல்கள், அதுவும் சட்டத்திற்கு எதிராக அவர் ஏதோ சில செயல்களை செய்கிறார் என்பதை ஓரளவுக்கு டீசரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது. கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.