விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' | 'பெருசு' முதியவர்களை பெருமைப்படுத்தும் | தாய்மாமன் உறவை பேசும் மாமன் படம் : கோடையில் ரிலீஸ் | பிளாஷ்பேக் : 'டிக் டிக் டிக்' படத்தால் சர்ச்சையில் சிக்கிய பாரதிராஜா | பிளாஷ்பேக் : தியேட்டர்களை கோவிலாக மாற்றிய நந்தனார் | பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம் | புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகத்தை அடக்க முடியாமல் துள்ளல் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் | தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா | லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது | கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிக்கும் விஷால் |
மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன் படங்களின் மூலம் நல்ல இயக்குனராக அறியப்பட்டவர் அமீர். எல்லா இயக்குனரையும் போன்றே அவருக்கும் நடிப்பு ஆசை வந்தது. யோகி என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார். அந்த படம் நல்ல படமாக இருந்தபோதும் அது ஒரு கொரியன் படத்தின் அப்பட்டமான காப்பி என்று தெரியவந்ததால் படம் வரவேற்பை பெறவில்லை. வட சென்னை படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.
இந்த நிலையில் அமீர் கதையின் நாயகனாக நடித்துள்ள நாற்காலி என்ற படம் வெளிவர இருக்கிறது. மூன் பிக்சர்ஸ் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார். முகவரி, காதல் சடு குடு, தொட்டி ஜெயாஉள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். இது ஒரு அரசியல் படம்.
அமீருடன், 555 படத்தில் நடித்த சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக இந்த படத்திற்காக "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு" என்ற பாடலை பாடியிருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. வரும் மார்ச் மாதம் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.