மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
அழகி படத்தில் அறிமுகமான மோனிகா. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும், ஹீரோயினாக அவர் பெரிய அளவுக்கு வளரவில்லை. அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இதனால் மனம் கலங்கி ஒதுங்கி விடாமல் மலையாளத்தின் பக்கம் தன் கவனத்தை செலுத்தினார். 916 என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கதைபறையும்போள், மணிக்காளல் பட இயக்குனர் மோகனன்தான் இயக்குனர். 916 என்பது தூய தங்கத்தை குறிக்கும் அளவு. அதையே படத்தின் தலைப்பாகவும் வைத்திருக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். அனுப்பேமன் ஹீரோ. இரண்டு குடும்பங்களின் அன்பையும், ஊடலையும் சொல்லும் படம். முகேஷ், மீரா ஜாஸ்மின், ஆசிஃப்பும் நடித்திருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசான படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மோனிகா. "மலையாளத்தில் இதற்கு முன் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் ஹீரோயினாக இதுதான் முதம் படம். அதுவும் மோகனன் சார் இயக்கத்தில் நடித்தது என் பாக்கியம். இந்தப் படத்தை தமிழில் வெளியிட இருக்கிறார்கள். மலையாளத்தில் என்னுடைய பெயர் பார்வனா. நியூமராலஜி பார்த்து வைத்திருக்கிறேன். என்கிறார் மோனிகா.