ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
துள்ளிவிளையாடு படத்திற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியிருக்கிறார். டைரக்டர் வின்சென்ட் செல்வா இயக்த்தில், ஆர்.பி.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படம் துள்ளி விளையாடு. யுவராஜ் - தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், வெண்ணிலா கபாடிகுழு புகழ் சூரி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் பிரகாஷ் ராஜ் ஒரு பாட்டு முழுக்க மும்பை மாடல் அங்கீதாவுடன் ஆட்டம் போட்டு அசத்தியிருக்கிறார்.
இந்த பாடல் ராஜஸ்தானில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் படமாக்கப்பட்டது. சண்டிக் குதிர... சண்டிக் குதிர... வண்டிக்குள்ள சிக்காத ஒன்டிக்குதிர... எனத்தொடங்கி தொடரும் இந்த பாடலுக்கு பிரகாஷ்ராஜ் ஆடியுள்ளார். அதுவும் வித விதமான, கலர்ஃபுல்லான ஆடைகளுடன் ஆடியிருக்கிறார்.