ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சீனுராமசாமி இயக்கத்தில் விஷ்ணு-சுனைனா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் நீர்ப்பறவை. இப்படம் மீனவர்களின் வாழ்வியல் சம்பந்தப்பட்ட கதை என்றபோதும், அதற்குள் ஒரு அழகான காதல் கதையையும் வைத்திருக்கிறார் இயக்குனர். கதைப்படி சுனைனா மீனவப்பெண் என்பதால் அவரது அழகான வெள்ளை தோளை கருப்பாக்கி மீனவ ஏரியா பெண்ணாக மாற்றியுள்ளனர்.
இதைப்பற்றி அப்படத்தில் சுனைனாவின் காதலனாக நடித்துள்ள விஷ்ணு கூறும்போது, நான் கருப்பாக இருப்பதால் எனது உடம்பில் எந்த மையும் தடவவில்லை. ஆனால் சுனைனா நல்ல கலராக இருப்பதால் உடம்பை கருப்பாக்கி உள்ளனர். என்றபோதும் வெள்ளை கலரில் தேவதையாக இருந்த சுனைனா, அந்த கெட்டப்பில் கருப்பு தேவதையாகத்தான் தெரிந்தார். அந்த கேரக்டரக மாறி அவரை என் காதலியாக பார்த்தபோது இந்த உலகத்திலேயே அவரை தவிர அழகான பெண்கள் யாருமே இருக்க முடியாது என்றே எனக்குத்தோன்றியது என்கிறார் விஷ்ணு.