பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |
டைரக்டர் மிஷ்கினுக்கும், தனக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை, என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த முகமூடி படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் வசூல் தேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் மிஷ்கினுக்கும், ஜீவாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாயின. இதனை ஜீவா மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மிஷ்கினுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது போல் செய்திகள் பரவி உள்ளன. எங்களுக்குள் எந்த மனக்கஷ்டமும் இல்லை, என்று கூறியுள்ளார். முகமூடி குறித்த விமர்சனங்கள் பற்றி கூறுகையில், முகமூடி படம் எங்களுக்கு திருப்தியாக இருந்தது. தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக உள்ளார். விநியோகஸ்தர்களுக்கும் திருப்தி. ஆனால் சிலர் விமர்சித்துள்ளனர். அதை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. காரணம், ரசிகர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. அதிகபட்சம் 70 சதவீதம் பேரை திருப்திப்படுத்தலாம். மிச்சம் உள்ளவர்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். அடுத்த படங்களில் என்னை விமர்சிப்பவர்களும் விரும்பும் வகையில் நடிப்பேன், என்றார்.




