ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எம்.கே.எல்., புரொடக்ஷன்ஸ் சார்பில், டி.ஜெயக்குமார் தயாரித்து, இயக்கி நடித்துள்ள படம், "கனல்! த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஜெயக்குமார், பவீனா, ரமேஷ் கண்ணா, சிங்கமுத்து, பாபிலோனா, மார்த்தாண்டம், சதீஷ், உதயா, புலிப்பாண்டி, மாஸ்டர் மனோஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு, முத்துலிங்கம், யுகபாரதி, அண்ணாமலை ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். நடனம் - உமா, அந்தோணி; ஸ்டன்ட் - ஜேசுதாஸ். அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ள இந்தப் படத்தில், ஒரு மாதம் பயிற்சி கொடுத்து, குதிரை ஒன்றை படம் முழுக்க நடிக்க வைத்துள்ளனர். மேலும், சதீஷ் என்ற நடிகர், இந்தப் படத்திற்காக, ஒன்றரை வருடமாக தலையில் முடி வளர்த்து நடித்துள்ளார். "கனல் அக்டோபரில் திரைக்கு வருகிறது.